கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்காலி பள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவருடைய மகன் மகேந்திரன் (16) கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முழு தேர்வு முடிவில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்ததால் மகேந்திரன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மகேந்திரன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.