சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியபோது “மகாகவி பாரதி எழுதிய கவிதைகளில் அறிவியல் கருத்துகள் இடம்பெற்று இருக்கிறது. பிரபஞ்சம் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேசுவதற்கு முன்பே பாரதியார் தன் பாடல்களில் சக்தி குறித்து பேசி உள்ளார். ஏழைகளுக்கு அரசு பள்ளி எனும் நிலை இருக்கிறது. தமிழகத்தில் பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு ஆட வைக்கின்றனர். அந்த வீடியோவை டுவிட்டரில் கல்வித்துறை அமைச்சர் போடுகிறார். ஆகவே அந்த அளவுக்கு தான் தமிழகத்தில் கல்வி இருக்கிறது என்று பேசினார்.