பள்ளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மேலும் இவர்களில் ஒரு ஆசிரியருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்பட 96 பேருக்கு பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளுக்கும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 1 மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 4 பேரையும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.