பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த மினிலாரி…. உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோபால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் மினி லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.