பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசில்வாடியில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மல்லன்குழி நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார் . இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *