பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழி சாலையில் மூனாண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிஷ் ரகுமான், ஷேக் அப்துல்லா, முகமது தாரிக் ஆகிய 3 பேரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *