“பல பதக்கங்கள் வெல்ல வேண்டும்” பிவி சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நாட்டிற்காக வரும் காலங்களில் இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டிற்காக இரண்டாவது பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.