பல்வேறு கோரிக்கை…. விவசாய சங்கத்தினரின் ஆர்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்தப் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளரான பெருமாள் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் இம்மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து மத்திய மந்திரியை பதவி நீக்கம் செய்வதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பின்னர் பிரதமர், மத்திய மந்திரிகள், உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆகியோரின் உருவப்படங்களை விவசாய சங்கத்தினர் நெருப்பு வைத்து எரிக்க முயன்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 4 பேரின் உருவப்படங்களை கைப்பற்றினர். இதற்கிடையே மத்திய அரசை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை விவசாயிகள் சங்கத்தினர் நெருப்பு வைத்து எரித்த நிலையில் காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *