
சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கூறினார்.
இது பற்றி அவர் கூறியதாவது, கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்று பொது மக்களிடம் கருத்து கேட்க இருக்கிறோம். அதன்பிறகு தான் கூட்டணி நிலைப்பாடு பற்றி முடிவு செய்யப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டதால் தற்போதும் அதே கூட்டணியில் தொடர்கிறோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து பலர் போட்டியிட்டதால்தான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன்.
நான் கடந்த தேர்தலில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதிக வாக்குகளும் பெற்றேன். மேலும் பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்றார்.