பரிசோதனையில் தெரிந்த உண்மை….. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்….. விவசாயியை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூக்கால் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

இதுகுறித்து விசாரித்தபோது சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.