பரிசோதனைக்கு அப்புறம்தான் அனுமதி…. அலுவலகத்திற்குள் நுழைய கட்டுப்பாடுகள்… தீவிரப்படுத்தப்படும் நடவடிக்கைகள்…!!

ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அலுவலகத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்படுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மாநகர் பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

எனவே ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்துள்ளனர். இதனையடுத்து பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ் விதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுகாதார பிரிவு ஊழியர்கள் கிருமிநாசினிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதால் அந்த அலுவலகத்திற்குள் நுழையும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்வதற்கு முன் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உள்ளே சென்றவர்கள் வெளியே வந்த பின்னரே வேறு ஒருவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *