பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான நிதின் கட்காரி மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி ஆக இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். இங்கு மந்திரி நிதின் கட்காரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த மர்ம நபர் 2 முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து மந்திரி அலுவலகத்தில் இருந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய மந்திரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.