நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் சென்னை நீலங்கரையில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த போது தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையில் சமூக ஆர்வலர் புகாரளித்தார். அதில் வாக்களிக்க வரும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை விஜய் மீறியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வரிசையில் நின்று வாக்களிக்காமல் போலீசாரின் உதவியோடு தனது வாக்கை விஜய் அளித்துள்ளார். எனவே அவர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது.