பரபரப்பு.! தோல்வியால் ஆத்திரம்….. நாற்காலிகளை பிடுங்கி பாக் ரசிகர்களை தாக்கிய ஆப்கானியர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது.

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஹ்மானுல்லா குர்பாஸ் 17 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.. அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இப்ராஹிம் சத்ரான் 35(37) ரன்கள் எடுத்தார். கடைசியில் ரசித் தான் ஒரு 18*(15) ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான்  அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்..

இதையடுத்து 130 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர்.. ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து 4ஆவது ஓவரில் பக்கர் ஜமானும் 5 ரன்னில் ரன் அவுட் ஆகி நடையை கட்டினார். அதனைத் தொடர்ந்து 20 ரன்கள் அடித்திருந்த முகமது ரிஸ்வான் 9ஆவது ஓவரில் ரசித் கான் சுழலில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 8.4 ஓவரில் 45/3 ஆக இருந்தது.. பின் இப்திகார் அகமது மற்றும் சதாப்கான் இருவரும் பொறுப்புடன் ஆடி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து 16 வது ஓவரில் இப்திகார் அகமது 30 ரன்களிலும், ஷீத் கான் வீசிய 17ஆவது ஓவரில் ஷதாப் கான் 33 ரன்களிலும் அடுத்தடுத்து  ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. பின் ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் 4, கடைசி பந்தில் குஷ்த்தில் ஷா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 109/7 என்று இருந்ததால் ஆட்டம் பரபரப்பானது.. 2 ஓவருக்கு 21 ரன்கள் தேவை..

அதன்பின் ஃபரீத் அகமது வீசிய 2ஆவது பந்தில் ஹரிஸ் ரவூப் 0 ரன்னில் நடையை கட்ட, அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆசிப் அலி 16(8) ஒரு சிக்ஸர் அடித்தார். பின்  அடுத்த பந்தில் ஆசிப் அலி சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.. இதையடுத்து கைவசம் ஒரு விக்கெட் இருக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான நேரத்தில் பாரூக்கி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்தையும் புல்டாஸாக வீச இளம்வீரர் நசீம் ஷா தொடர்ச்சியாக 2 சிக்ஸர் அடித்து வெற்றிபெற வைத்து அரங்கை அதிரச்செய்தார்..

இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா பரிதாபமாக வெளியேறியது. நசீம் ஷா 14(4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 9 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது.

இந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கோபம் மற்றும் ஏமாற்றமடைந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தினர்.. அதாவது பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை பிடுங்கி வீசி எரிந்து சண்டைக்கு சென்றனர். அவர்களை தாக்கினர்.. அதுமட்டுமில்லாமல் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள பரபரப்பான சாலைகளில் ஸ்டேடியம் வளாகத்திற்கு வெளியே இரு தரப்பு ரசிகர்களும் சண்டையில் ஈடுபட்டதாக வேறு சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது .

இப்போட்டியில் இரு தரப்பு வீரர்களும் கட்டிப்பிடித்து சிரித்து உற்சாகமாக விளையாடிய ஆட்டம், 19வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரீத் அகமதுவுடன் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஆசிஃப் தனது மட்டையை ஃபரீத்தின் முகத்திற்கு அருகில் உயர்த்தியதால் இரு வீரர்களும் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர், மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவரையும் பிரிக்க விரைவதற்குள் அவர்கள் ஒருவரையொருவர் தள்ளினர். இந்த சம்பவம் 1983ல் ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் பிரபலமற்ற டென்னிஸ் லில்லி-ஜாவேத் மியான்டட் சண்டையிட்டதை பலருக்கு நினைவூட்டியது.