பரபரப்பு!!…. சொத்து பிரச்சனை”அண்ணனை படுகொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சிவகாமி அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு  அண்ணன்  பழனிச்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வயலில் நின்றுகொண்டிருந்த பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தரும்படி சிவகாமி  தகராறு செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக   கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவகாமி பழனிச்சாமியை  கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகாமியை கைது  செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *