நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட அதே நிலை தான் கருணாநிதி சிலைக்கும் ஏற்படும். வங்கதேசத்தின் தந்தை சிலையே அங்கு உடைக்கப்பட்டது. அதிகாரம் என்பது யாருக்கும் நிலையானது கிடையாது. தமிழ் மகன் ஒருவன் ஆட்சி வரும்போது அனைத்தும் பொட்டலாகிவிடும்.
திராவிடன் என்பது திருடுவதற்கும் திருடன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடித்து வைக்கும் திமுக தற்போது அந்த திட்டங்களுக்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது. கொலைகாரனும் செத்து விழுந்தவனும் ஒன்றா. தமிழக வெற்றி கழகத்தில் இருந்து பலர் என்னுடைய கட்சியில் இணைகிறார்கள் என்றார். மேலும் கருணாநிதி சிலைகள் உடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது