சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது.
இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில அரசு தான் செய்யவேண்டும். சிறு குறு தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.