தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற திங்கட்கிழமை அதாவது ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் செல்கிறார். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏற்கனவே விஜய் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி கொடுத்தார். இந்த நிலையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் மட்டும் தான் விஜய் அரசியல் செய்வதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் களத்திற்குள் நேரடியாக இறங்குகிறார்.

இந்நிலையில் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் பற்றி பார்ப்போம். அதாவது பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க காவல்துறை 2 இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில் எந்த இடத்தில் வைத்து விஜய் சந்திக்கிறார் என்பது குறித்து இன்று பதில் சொல்ல வேண்டும். அதன் பிறகு அதிக கூட்டத்தை கூட்டாமல் குறிப்பிடப்பட்ட நபர்கள் மட்டும்தான் வரவேண்டும். மேலும் ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் மக்களை சந்தித்து முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.