பயப்படாம போங்க நாங்க இருக்கோம்…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் கொடி அணிவகுப்பு….!!

நெல்லையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் படையினரை நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் இவர்கள் காவல்துறையினருடன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், மக்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும் ஆங்காங்கே கொடி அணிவகுப்பு நடத்தினர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் சேர்ந்து கொடி அணிவகுப்பை நடத்தி சில முக்கிய தெருக்கள் வழியாக சென்றனர்.