விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பிரபாகரன். தன்னுடைய குடும்பத்தினர் உட்பட 5 பேருடன் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் மதகடிப்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரும் இவர்களுடைய காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் கார் ஓட்டுநர் மற்றும் பிரபாகரன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொரு காரில் இருந்த இருவரும் உயிரிழந்துவிட்டனர். அதன் பிறகு மூவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.