உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கஞ்ச் சாலையில் ஒரு டிரக் சென்று கொண்டிருந்தது. இந்த ட்ரக் ஒரு ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக முயற்சி செய்த நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோவின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்தக் கோர விபத்தில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே துடித்து பலியாகினார். இந்த விபத்தில் 4 வேறு படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பயங்கர விபத்தில் பலியானவர்களின் புகைப்படம் வெளியாகி நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.