பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. தனியார் நூற்பாலையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.