சோசியல் மீடியாவில் விளம்பரம் விளம்பரங்கள் ஒரு சில நேரம் மக்களை கவரும். ஏனென்றால் மற்ற விளம்பரங்களை போல் இல்லாமல் அது வித்தியாசமாக இருக்கும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் பெயர், வயது, படிப்பு உள்ளிட்ட விபரங்களோடு விளம்பரம் கொடுப்பார்கள். வேலை தேடும் நபர்கள் தங்களது படிப்பு, அனுபவம், சம்பளம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு கம்பெனிக்கு சென்று வேலை கேட்பார்கள்.
ஆனால் வேலை கேட்டு வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்துள்ளனர். பெயர்:பாலாஜி, வயது:கல்யாண வயசு தான், படிப்பு:வேலைக்கு தேவையான அளவு, முன் அனுபவம்:அதுவும் இருக்கு, சம்பளம் எதிர்பார்ப்பு:உங்களால் முடிந்தது. நான் உங்க கம்பெனியில் வேலை பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா காண்டாக்ட் பண்ணுங்க என கூறி ஒரு மெயில் ஐடியை குறிப்பிட்டுள்ளனர்.