மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் பகுதியில் அன்வர் பாஷா(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் அன்வர் பாஷா அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அன்வர்பாஷா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அன்வர் பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.