பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் வடக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜி என்ற மகளும், விஜயகுமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மானூர் பல்லிக்கோட்டை கால்வாயின் வடக்குப்புரம் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் சுரேஷின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார், இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் சுஜியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தந்தை மற்றும் மகனின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *