பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விவசாயியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ராஜகோபாலின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.