பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்..!!!

இரு பெண்களின் கனீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டு இருப்பீர்கள். அந்தப் பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்து விடும். அந்தப் பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள். அவர்களில் இளையவரான லலிதா இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் செட்டிலானவர். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடியுள்ளனர்.