பன்முகப் பண்பாட்டை சிதைக்கும் முயற்சி…. தமிழக அரசு நிச்சயம் முறியடிக்கும்…. நிதி அமைச்சர் அதிரடி….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பன்முகப் பண்பாட்டை சிதைக்கும் முயற்சியில் பாசிச சக்திகள் ஈடுபட்டுள்ள வேளையில் அதை முறியடிக்கும் கடமை தமிழக அரசுக்கு இருக்கின்றது என தெரிவித்தார். தனது பட்ஜெட் உரையில் இதுபற்றி பேசிய அவர் திராவிட இயக்கம் சமூக நீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் அது இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *