பனிச்சறுக்கில் வழி மாறிய இளைஞர்… மீட்க சென்ற குழுவினருக்கு… காத்திருந்த ஆச்சர்யம்…!!

பனிச்சறுக்கில் தவறிய இளைஞர் பாதுகாப்பாக அமர்ந்திருந்த சம்பவம் ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டிஷின் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 6:15 மணியளவில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சென்ற நிலையில் தாம் வழி தவறி வந்ததை உணர்ந்துள்ளார். அச்சமயத்தில் அவரின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரரை தேடி மீட்பு குழுவினர் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கு பனிச்சறுக்கு வாகனமொன்று நிற்பதை கண்ட மீட்பு குழுவினர் அருகே சென்று பார்த்துள்ளனர். அங்கு சென்ற மீட்பு குழுவினர் திகைப்படைந்துள்ளனர்.

அதாவது அந்த இளைஞர் பனிச்சறுக்கு வாகனத்தை வருபவர்களின் கண்ணில் படும்படியாக நிறுத்தி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பனியிலேயே ஒரு குகையை தோண்டியிருக்கிறார். அழகான குகையை தோண்டி முடித்துவிட்டு பாதுகாப்பாக அதனுள் அமர்ந்துள்ளார். அதன் பிறகு தான் வைத்திருந்த உணவு மற்றும் தண்ணீரை சௌகர்யமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். இதனைக்கண்ட மீட்பு குழுவினர் ஆச்சரியம் அடைந்ததோடு பாதுகாப்பு வழிமுறைகளை கற்று அதனை சரியாக பயன்படுத்தி பத்திரமாக இருந்ததால் பாராட்டியுள்ளனர். மேலும் தங்களின் வேலையை சுலபமாகி விட்டதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *