பனங்கிழங்கை பார்த்தால் உடனே வாங்குங்க…. சாப்பிட்டால் நிறைய நன்மைகள் நிச்சயம்…!!!

பனங்கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இப்போது பார்க்கலாம்.

பனங்கிழங்கு என்பது பணம் மரத்தில் உள்ள பணம் பழத்தை காயா வைத்து பின்னர் அதை முளைக்க வைத்து அதில் இருந்து வருவது தான் பனங்கிழங்கு. இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. மேலும் பனங்கொட்டையில் உள்ள தவுன் எனப்படும் உணவில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் இருக்கிறது. இது கிராமப்புறங்களில் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. மேலும் இது தைமாதம் அதிக அளவில் கிடைக்கிறது. கிராமப்புறங்களில் பனங்கிழங்கிற்கு பஞ்சமே கிடையாது. பனங்கிழங்கு என்றாலே அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். பனங்கிழங்கின் உள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

1.மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கு வேக வைத்து அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் சரியாகும்.

2.பனங்கிழங்கு தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள், பெண்களுக்கு கர்ப்பப்பை பலம் பெறும்.

3.பனங்கிழங்கு வாயுத்தொல்லை உடையதால் பூண்டு மிளகு உப்பு சேர்த்து சாப்பிட்டால் இதனைத் தவிர்க்கலாம்.

4.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.