மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாண்டுவா நகரில் ஒரு குளம் உள்ளது. இங்கு சம்பவ நாளில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்தபோது 3 சிறுவர்கள் பலத்த காயங்களுடன் கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ஒரு சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பந்து என நினைத்து சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக எம்.பி லாக்கெட் சட்டர்ஜி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளர். மேலும் இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.