பிரபலமான பாடகி சாரதா சின்ஹா. இவர் ஒரு போஜ்புரி பாடகி ஆவார். இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் திடீரென உடல் நலம் மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.