வருங்காலத்தை கணிப்பதாக கூறி….. மர்ம நபர் செய்த வேலை…. காத்திருந்த அதிர்ச்சி !!

நபர் ஒருவர் எதிர்காலத்தை கணித்து கூறுவதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கனடாவைச் சேர்ந்த Patrice Runner (54) என்பவர் வினோதமான சக்தி தனக்கு இருக்கிறது என்று கூறி அமெரிக்கர்கள் பலருக்கு மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த வகையான டாலரை அணிந்து கொண்டால் நன்மை நடக்கும் என்று கூறி தகவல்களை அனுப்பி எளிதாக ஏமாறுபவர்களை குறிவைத்து சிறிய அளவிலான பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை நம்பி ஏமாற்றமடைந்த பலரும் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சிறிய அளவில் மோசடி செய்து வந்தாலும் Runner மற்றும் அவரது குழுவினர் சேர்ந்து மொத்தமாக மோசடி செய்துள்ள தொகை 200 மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Maria Duval என்ற ஒருவர் வருங்காலத்தை கணிப்பதில் பிரபலமானவர். அவரின் பெயரை உபயோகித்து தான் Runner இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இதனால் பணம் இழந்த பலரும் தாங்கள் Maria Duval ஐ தொடர்பு கொண்டுள்ளதாக நினைத்து  ஏமாற்றப்பட்டுளோம்  என்று கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் இந்த மோசடி வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது மோசடி வழக்கு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பல மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.