பண்ணையில் கொரோனா… 1000 விலங்குகளுக்கு… நேர்ந்துள்ள கொடூரம்…!!

பண்ணையாளர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக தன் பண்ணையிலிருக்கும் 1000 விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளார். 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Mink என்ற விலங்குகளை தன் பண்ணையில் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் பண்ணையில் பணிபுரிந்து வரும் 8 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தோற்று எங்கிருந்து பரவியுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் முயற்சியாக அவரின் பண்ணையில் இருக்கும் Mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிவில் அவர் பண்ணையிலிருக்கும் 15,000 விலங்குகளில் 200 விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே தன் பண்ணையில் இருக்கும் 1000 விலங்குகளை கொள்வதற்கு பண்ணையின் உரிமையாளர் முடிவெடுத்துள்ளார். ஆனால் கனடாவின் தலைமை கால்நடை மருத்துவர் Dr.Ryna Gunvaldson என்பவர் கூறுகையில், அந்த விலங்குகளை கொல்வதற்கு அரசாங்கம் உத்தரவிடவில்லை. அந்த முடிவு பண்ணையின் உரிமையாளர் எடுத்துள்ள தனிப்பட்ட முடிவு தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக மில்லியன் கணக்கான Mink வகை விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *