பண்டிகை தினத்தில் மதுகுடித்த கணவர்…. சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய திஷானி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அன்புமணி பொங்கல் பண்டிகையையொட்டி மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சகுந்தலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *