பணி முடிந்து வந்த அதிரடிப்படை ஏட்டு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அதிரடிப்படை ஏட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம்பட்டியில் கோபால்சாமி(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுகுய்யனூரில் செயல்படும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சண்முகப்பிரியா(38) என்ற மனைவியும், அஸ்மிதா(11), தன்ஷிகா(8) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோபால்சாமி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை படுக்கையிலேயே கோபால்சாமி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால்சாமியின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபால்சாமி எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *