“பணிமுடித்து விட்டு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பெண் போலீஸ்”… லாரி மோதி பெண் போலீஸ், மகன் உயிரிழப்பு…!!!!

மொபட்டில் சென்று கொண்டிருக்கும்போது லாரி மோதியதால் போலீஸ் அம்மா, மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த வந்த உமாதேவி என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு தன் கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகனுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்பக்கம் அமர்ந்திருக்க கணவர் மொபட்டை ஓட்டினார்.

அப்போது சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இரண்டு கார்கள் மீது மோதியதுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த மொபட்டின் மீது மோதியதால் உமாதேவி மற்றும் அவர் மகன் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *