புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவில் பேசியபடி பாஜகவினர் பணம் தராததால் பெண்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.