“பட்டுப் புடவை வாங்கத் தான் வச்சிருக்கேன்”… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில்  வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1  லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தியம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த காரில் உரிய ஆவணமின்றி 1 லட்சம் ரூபாய் வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதனையடுத்து காரில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது அவர் பெங்களூருவை சேர்ந்த சையத் என்பதும் சேலம் கொண்டலாம்பட்டிக்கு பட்டுப் புடவை வாங்க பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து  தேர்தல் அதிகாரி கீதா பிரியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.