பணப்பட்டுவாடா… வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம்… பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததால் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலை மறியல் செய்த நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.