“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் 10 ரூபாய் நோட்டுகளை வீசியது யார் என்றும், அவர் எதற்காக வீசினார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply