பட பிரமோஷன்….. “அறிமுக நடிகையுடன் நெருக்கமாக போட்டோ ஷூட்”…. மாதவனை விளாசும் ரசிகாஸ்…!!!!!

பட பிரமோஷனுக்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக மாதவன் போட்டோ ஷூட் நடத்தியதை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அடுத்து வாரம் இவரின் திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக அறிமுக நடிகையுடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும்படி போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த போட்டோ ஷூட்டில் மாதவன் அறிமுக நடிகை குஷாலி குமாரை கட்டி பிடித்தபடி உள்ளார். இந்த போட்டோ ஷூட்டிங்கை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.