புனேவில் ஒரு கால் சென்டர் உள்ளது. இங்கு சுபதா சங்கர் கோதரே (28) என்ற பெண் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் கிருஷ்ண சத்திய நாராயணா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. அதாவது தன்னுடைய தந்தையின் மருத்துவ செலவுக்காக சுபதா 2 வருடங்களில் 4.5 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுள்ளார். இந்நிலையில் சுபதாவிடம் நேற்று கிருஷ்ணா தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுநிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட மாலை நேரத்தில் சுபதா அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கிருஷ்ணா இறைச்சி வெட்டும் கத்தியால் அவருடைய கையில் வெட்டிய நிலையில் தன்னை விட்டு விடும்படி அந்த பெண் கெஞ்சினார். ஆனாலும் அவர் விடாமல் அந்த பெண்ணை கொலை செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த சம்பவத்தை தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணா அவரைக் கொன்ற பின் கத்தியை தூக்கி வீசினார். அவரை சக ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் கொடுத்தனர். மேலும் இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.