அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைக்கும் அவலங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே ஆனாங்கூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பஞ்சாயத்து தலைவியாக திருமதி சங்கீதா என்பவர் வேலை பார்க்கிறார். இவர் இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்.

இவரை நாற்காலியில் அமர விடாமலும் கோப்புகளில் கையெழுத்து போட விடாமலும் ஜாதி ரீதியாக திட்டி அவமரியாதை செய்துள்ளனர். அவர் தன்னை அவமரியாதை செய்ததாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் திமுகவினர் மீது குற்றம் சுமத்தி காந்தி ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தர்ணா போராட்டம் நடத்தினார். பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவல நிலை தொடர்ந்து மு க ஸ்டாலினின் ‌ திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. மேலும் இதற்கு என்னுடைய கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.