தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் விருதுநகருக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி காரியாபட்டி தெற்கு ஆற்றில் புதிய அணை கட்டப்படும். அருப்புக்கோட்டை அருகே 350 கோடி செலவில் புதிய சிப்காட் அமைக்கப்படும். அதன் பிறகு கௌசிகா ஆறு, கஞ்சம்பட்டி கண்மாய் சீரமைக்கப்படும்.
சிவகாசியில் 18 கோடியில் மாநாட்டு கூட்ட ரங்கம் அமைக்கப்படும். விருதுநகரில் 25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும். விருதுநகரில் சுமார் 41 கோடி செலவில் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை இனி உயர்கல்வி வரையில் அரசாங்கம் முழுமையாக இருக்கும் என்று அறிவித்தார். மேலும் இதற்காக புதிய நிதியம் உருவாக்கப்பட்டு சுமார் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதல்வர் கூறினார்.