கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம் கழித்து சிலர் அந்த பெண்ணின் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த இளம்பெண் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அங்கு படுத்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பிறகு அந்த பெண்ணின் போதையை தெளிய வைக்க முகத்தில் தண்ணீர் தெளித்தனர். எழுந்து பார்த்த அந்த பெண் தன்னை சுற்றி ஏன் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற குழப்பத்தோடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பட்டப்பகலில் மது போதை தலைக்கேறி சாலை ஓரத்தில் இளம் பெண் படுத்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.