பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரத்தில் பட்டப் பகலில் நடந்த கொலை சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் சிமர்பால் சிங் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடையின் பெயர் ஜெய்பால் ஜுவல்லர்ஸ். இந்நிலையில் சிமர்பாலை மற்றொரு நகை கடை உரிமையாளரான ஜஸ்தீப் சிங் சான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை பார்த்து பேசிய நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் கோபத்தில் ஜஸ்தீப்‌ கடையை விட்டு தன் குடும்பத்துடன் வெளியேறிய நிலையில் பின்னர் குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்டு துப்பாக்கியுடன் மீண்டும் அந்த கடைக்கு வந்தார்.

பின்னர் சிமர்பால் தலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்த தப்பி ஓடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த குற்றவாளியை கைது செய்தனர். மேலும் தங்கம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.