தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது அடிக்கடி கவர்ச்சி உடைகளில் வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது பிலிம் பேர் விருது வழங்கும் விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.