நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை அரசு உயர்த்தக்கூடும் என்று தெரிகிறது.

இவற்றின் விலை பட்ஜெட்டுக்கு பிறகு அதிகரிக்கக்கூடும்?

# அரசு தயார் செய்துள்ள பட்டியலில் தனியார் ஜெட்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், ஹை-கிளாஸ் பேப்பர் மற்றும் வைட்டமின்கள் அடங்கும்.

# இறக்குமதியை குறைக்கவும், நாட்டில் இந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், அவற்றின் மீதான இறக்குமதி வரியானது அதிகரிக்கப்படுகிறது.

# இது தற்சார்ப்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என அரசு கூறுகிறது.

# அத்துடன் சென்ற வருடமும் பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தி அரசு அறிவித்திருந்தது.