“படிப்பதற்கு சீட் வாங்கி தருகிறேன்”…. விவசாயியிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார்.

அதனை நம்பி சுதர்சன் கூறிய வங்கி கணக்கில் குமார்  80 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி மனோஜ் குமாருக்கு கல்லூரியில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து குமார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுதர்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.